×

வேண்டுதல் நிறைவேறாததால் சாமி சிலையை திருடிய வாலிபர்

கவுஷாம்பி: தான் விரும்பிய மணப்பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறாததால் கோயிலில் இருந்து சிவலிங்கத்தை திருடிய வாலிபர் கைதானார். உபி மாநிலம் கவுஷாம்பி மாவட்டம், மகிவாகாட் கிராமத்தை சேர்ந்தவர் சோட்டு(27). அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு சோட்டு விரும்பினார். ஆனால், அவருடைய பெற்றோர் பெண்ணை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எப்படியில் பெற்றோரை சமாதானப்படுத்தி தெய்வ பலனாக அந்த பெண்ணை மணம் முடித்து விடலாம் என சோட்டு நினைத்துள்ளார்.

இதற்காக அங்குள்ள சிவன் கோயிலில் தினமும் வழிபாடு நடத்தி வந்துள்ளார்.ஒரு மாதத்திற்கும் மேலாகியும் காரியம் கை கூடவில்லை. இதனால் கடும் ஏமாற்றமடைந்த அவர் கோயிலில் உள்ள சிவன் சிலையை திருடியுள்ளார். கடந்த 1ம் தேதி அங்கு வந்த பக்தர்கள் கோயிலில் சிவன் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் சோட்டுவை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்பு கொண்டார். காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலையை போலீசார் மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வேண்டுதல் நிறைவேறாததால் சாமி சிலையை திருடிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Sami ,Kaushambi ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...